ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறைவு

ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷக்தாவத் உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 48.
கஜேந்திர சிங் ஷக்தாவத்
கஜேந்திர சிங் ஷக்தாவத்

ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷக்தாவத் உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 48.

ராஜஸ்தான் மாநிலத்தின் வல்லபாநகரின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கஜேந்திர சிங் ஷக்தாவத். கல்லீரல் தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தில்லி மருத்துவமனையில் ஷக்தாவத் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com