தெலங்கானா: ஏழைகளின் மருத்துவ பரிசோதனைக்காக இலவச மினி ஆய்வகம்

அடிப்படை பரிசோதனைகளை செய்துகொள்ளும் வகையில் ஏழை மக்களுக்காக தெலங்கானா அரசு மினி ஆய்வகங்களை தொடங்கியுள்ளது.
ஹைதராபாத்: ஏழைகளின் மருத்துவ பரிசோதனைக்காக இலவச மினி ஆய்வகம்
ஹைதராபாத்: ஏழைகளின் மருத்துவ பரிசோதனைக்காக இலவச மினி ஆய்வகம்

அடிப்படை பரிசோதனைகளை செய்துகொள்ளும் வகையில் ஏழை மக்களுக்காக தெலங்கானா அரசு மினி ஆய்வகங்களை தொடங்கியுள்ளது.

இந்த ஆய்வகங்கள் மூலம் ரேடியாலஜி, எக்ஸ்ரே, இசிஜி போன்ற இதய நோய் சார்ந்த பரிசோதனைகளை இலவசமாக செய்துகொள்ள இயலும்.

இது குறித்து பேசிய உள்துறை அமைச்சர் மொஹ்முத் அலி, மருத்துவத் துறையில் கடந்த மூன்று மாதங்களாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பஸ்தி துவாகனா திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் இலவசமாக தரமான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் செயல்படும் மினி ஆய்வகங்கள் மூலமும் ஏழை மக்கள் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதுவரை 8 மினி ஆய்வகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்கள் மூலம் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக அளவிலான மினி ஆய்வகங்களை அமைக்க தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com