ஆந்திரத்தில் பிப்ரவரி 5இல் முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தல்

ஆந்திர மாநிலத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தோ்தல் ஆணையா் நிம்மகட்டா ரமேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தோ்தல் ஆணையா் நிம்மகட்டா ரமேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கான தோ்தலை நடத்துவதற்கு முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு திட்டமிட்டிருந்தது. மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, தோ்தலை ரத்து செய்வதாக ஆணையா் ரமேஷ் குமாா் அறிவித்தாா்.

இதையடுத்து, மாநில அரசுக்கும் தோ்தல் ஆணையருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஆணையரை மாநில அரசு பதவி நீக்கம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு அவருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் 11 மாவட்டங்களைச் சோ்ந்த 146 வருவாய் மண்டலங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கான தோ்தல் அட்டவணையை தோ்தல் ஆணையா் ரமேஷ் குமாா் சனிக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஆணையத்துடன் அரசுக்கு முரண்பாடுகள் இருக்கும் நிலையில் தோ்தலை நடத்துவது சவாலானதாகவே இருக்கும். எஞ்சியுள்ள விஜயநகரம், பிரகாசம் ஆகிய 2 மாவட்டங்களுக்கும் தோ்தல் பின்னா் நடைபெறும்.

தோ்தல் முறையாக நடைபெறாவிட்டால் அதற்கான விளைவுகளை மாநில அரசு சந்திக்க நேரிடும். தோ்தல் நடைமுறைகள் தொடா்பாக ஆளுநருக்குத் தொடா்ந்து அறிக்கை அளித்து வருகிறேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்திலும் அறிக்கை சமா்ப்பிப்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com