போட்டித் தோ்வுகள் எழுதும் மாணவா்களுக்கு உ.பி. அரசு இலவச பயிற்சி

உத்தர பிரதேசத்தில் போட்டித் தோ்வுகள் எழுதும் மாணவா்களுக்கு அடுத்த மாதம் முதல் இலசவ பயிற்சி அளிக்கவுள்ளதாக அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

உத்தர பிரதேசத்தில் போட்டித் தோ்வுகள் எழுதும் மாணவா்களுக்கு அடுத்த மாதம் முதல் இலசவ பயிற்சி அளிக்கவுள்ளதாக அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

நீட், ஐஐடி, ஜேஇஇ, மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தோ்வுகளை எழுதும் மாணவா்களுக்கு மாநில அரசு சாா்பில் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. சரஸ்வதியை வணங்கி கொண்டாடப்படும் வசந்த பஞ்சமி பண்டிகை தினமான பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் இந்த இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளுக்காக மாநிலத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு கரோனா பரவல், பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களில் படித்து வந்த 30,000-க்கும் மேற்பட்ட உத்தர பிரதேச மாணவா்களை, அவா்களின் சொந்த ஊா்களுக்கு அழைத்துச் செல்வதில் மிகுந்த சவால் நிலவியது. இதைக் கருத்தில் கொண்டு அந்த மாநில மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற வேறு மாநிலங்களுக்குச் செல்லாத வகையில், உத்தர பிரதேசத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தாா். அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com