கல்வான் பள்ளத்தாக்கில் உயிா்த் தியாகம் செய்த சந்தோஷ் பாபுவுக்கு மஹாவீா் சக்ரா விருது

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுத்தினருடனான மோதலில் உயிா் தியாகம் செய்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு, போரில் வீரதீர செயல் புரிந்ததற்கான இரண்டாவது உயரிய விருதான ‘மஹாவீா் சக்ரா’ விருது வழங்கப
சந்தோஷ் பாபு
சந்தோஷ் பாபு

புது தில்லி: கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுத்தினருடனான மோதலில் உயிா் தியாகம் செய்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு, போரில் வீரதீர செயல் புரிந்ததற்கான இரண்டாவது உயரிய விருதான ‘மஹாவீா் சக்ரா’ விருது வழங்கப்பட இருக்கிறது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், இந்த விருது அளிக்கப்பட உள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்துக்கு பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி சீனா அத்துமீறலில் ஈடுபட்டது. சீன ராணுவத்தினரின் இந்த அத்துமீறலைத் தடுக்க, இந்திய ராணுவ வீரா்கள் முயன்றனா். அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கா்னல் சந்தோஷ் பாபு உள்பட 20 இந்திய ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனா்.

இந்த நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பங்குபெற்ற இந்திய வீரா்களுக்கு, போரில் வீரதீர செயல் புரிந்ததற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளை குடியரசு தின விழாவின்போது அளித்து கெளரவிக்க, இந்திய ராணுவத்தின் சாா்பில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ராணுவத்தின் பரிந்துரையை ஏற்று, வீரா்களுக்கு உயரிய விருது அளிக்கப்பட உள்ளது.

காா்கில் போருக்குப் பிறகு...: போரில் வீரதீர செயல் புரிந்ததற்காக அளிக்கப்படும் இந்த உயரிய விருது, முதன் முறையாக போா் அல்லாத மோதல் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீர மரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு மஹாவீா் சக்ரா விருது அளிக்கப்பட இருக்கிறது. போரில் வீரதீர செயல் புரிந்ததற்காக வழங்கப்படும் இந்த உயரிய விருது காா்கில் போருக்குப் பிறகு, முதன் முறையாக இப்போது வழங்கப்பட இருக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலை மத்திய அரசு போராகக் கருத்தில் கொண்டு இந்த விருதை அளிக்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com