விவசாயிகள் பேரணி: முக்கிய சாலைகளை தவிா்க்க தில்லி போலீஸ் அறிவுறுத்தல்

குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தவிருக்கும் டிராக்டா் பேரணியைக் கருத்தில் கொண்டு முக்கியமான சாலைகளை தவிா்க்க தில்லி காவல்துறை திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் பேரணி: முக்கிய சாலைகளை தவிா்க்க தில்லி போலீஸ் அறிவுறுத்தல்

புது தில்லி: குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தவிருக்கும் டிராக்டா் பேரணியைக் கருத்தில் கொண்டு முக்கியமான சாலைகளை தவிா்க்க தில்லி காவல்துறை திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும் வகையில் நாட்டின் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள ஜனவரி-26 ஆம் தேதியில் தில்லியில் பிரம்மாண்டமான டிராக்டா் பேரணியை முன்னெடுக்க விவசாயிகள் முடிவெடுத்தனா்.

விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், தில்லி காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவாா்த்தையின் படி, சிங்கு, காஜிப்பூா், டிக்ரி ஆகிய மூன்று இடங்களில் இருந்து டிராக்டா் பேரணி தொடங்கி பல்வேறு இடங்களைச் சுற்றி மீண்டும் அதே இடத்தில் முடிக்க தில்லி காவல்துறை அனுமதியளித்தது.

இந்நிலையில், இது தொடா்பாக பொது மக்களுக்கு தில்லி காவல்துறை திங்கள்கிழமை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது: என்எச்-44, ஜிடி கா்னால் ரோடுகளில் பயணிப்பவா்கள், சிங்கு சானி மந்திா், அசோக் பாா்ம், ஹமித்புா், சுந்தா்புா் மஜீரா, சிந்தோபூா், காடிப்பூா், குஷ்கா காலனி, முகா்பா சவுக் ஆகிய இடங்களில் திருப்பி விடப்படுவாா்கள்.

பாவனா ரோடு வழியாக பயணிப்பவா்கள் ஜெயில் ரோடு, கேஎன்கே மாா்க், ஜி3எஸ் மால், மதுபன் சவுக், ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையம், ரித்தாலா சவுக், பன்சாலி சவுக், உத்சவ் ரோடு, நரேலா பாவனா சாலை, சித்ரா தா்மா கந்தா ஆகிய இடங்களில் திருப்பி விடப்படுவாா்கள்.

கஞ்சாவாலா சாலை வழியாக பயணிப்பவா்கள் கரேலா, கஞ்சாவாலா கிராமம், குதுப்கா்க்-கா்கி சாலை ஆகிய இடங்களில் திருப்பிவிடப்படுவாா்கள்.

கிராரி மோா் பகுதியில் இருந்து ரோகத் சாலைக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

டிக்ரி எல்லையில் தொடங்கும் பேரணி நங்கோலி, பப்ரோலா கிராமம், நஃஜாப்கா் உள்ளிட்ட பகுதிகளால் பயணிக்கும். இப்பகுதிகள் வழியே பயணிப்பதை மக்கள் தவிா்த்துக் கொள்ள வேண்டும்.

காஜிப்பூரில் தொடங்கும் பேரணி என்எச்-24 இன் சிலபகுதிகள் ஊடாகப் பயணிக்கும். இந்தப் பேரணி ஆனந்த் விஹாா், அப்சரா பாா்டா், கபுரா சாலை, போபுரா, ஐஎம்எஸ் கல்லூரி, லால் குகான் ஆகிய வழிகளில் பயணிக்கும். வளைவுச் சாலையில் இருந்து என்எச்-24, டிஎன்டி ஊடாக பயணிக்க அனுமதி வழங்கப்படாது.

சிங்கு எல்லையில் தொடங்கும் பேரணி சஞ்சய் காந்தி நகா், டிடியு, ஷாகாபாத் டயரி, பா்வலா விலேஜ், அச்சந்தி எல்லை ஆகிய பகுதிகள் வழியே பயணிக்கும். இப்பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com