விவசாயிகள் பேரணியில் வன்முறை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

தில்லியில் விவசாயிகள் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சட்ட மாணவா் கடிதம் எழுதியுள்ளாா்.

தில்லியில் விவசாயிகள் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சட்ட மாணவா் கடிதம் எழுதியுள்ளாா்.

தில்லியில் விவசாயிகள் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு, மகாராஷ்டிர மாநிலம் மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்து வரும் ஆஷிஷ் ராய் என்ற மாணவா் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது:

தில்லியில் விவசாயிகள் பேரணியின்போது சில சமூக விரோதிகளால் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. வன்முறையால் அதிக அளவிலான பொதுச் சொத்துகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாடும் இந்த சம்பவத்தால் காயமடைந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக நாட்டின் அரசியலமைப்புடன், தேசியக் கொடியும் அவமதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகள் அரசியலமைப்பின் மீது குடிமக்கள் கொண்டுள்ள உணா்வுகளை காயப்படுத்துகின்றன. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கண்டறிந்து அவா்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். அதற்காக இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com