இன்று பிற்பகல் 3 மணிக்கு மருத்துவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை!

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

நாட்டின் புகழ்மிக்க மருத்துவரும், மேற்குவங்க மாநிலத்தின் இரண்டாவது முதல்வருமான மருத்துவர் பிதான் சந்திர ராயின் (ஜூலை 1, 1882- ஜூலை 1, 1962) நினைவாகவும், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டவும்,  அவரது பிறந்த நாள், இந்தியாவில் தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  

இந்த நாளில் மருத்துவர்களின் சேவையை பலரும் பாராட்டி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'மருத்துவர்கள் தினத்தன்று, அனைத்து மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மருத்துவ உலகில் இந்தியாவின் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை, மேலும் நம்முடைய புவியை ஆரோக்கியமாக மாற்ற அவர்கள் பங்காளித்துள்ளனர்' என்றார். 

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை குறித்து தான் பேசியதையும் பகிர்ந்துள்ளார். 

மேலும் தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி மருத்துவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com