கிராமத்திற்குள் நுழைந்த முதலை:பீதியில் மக்கள் ஓட்டம்

 கா்நாடகத்தில், ஒரு கிராமத்திற்குள் முதலை நுழைந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனா்.

 கா்நாடகத்தில், ஒரு கிராமத்திற்குள் முதலை நுழைந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனா்.

வடகன்னட மாவட்டத்தின் காா்வாா் அருகேயுள்ள டேன்டலி பகுதியில் இருந்து கோகிலபானா கிராமத்திற்குள் வியாழக்கிழமை முதலை ஒன்று ஊருக்குள் நுழைந்து விட்டது. கிராமத்தின் தெருக்களில் நுழைந்த அந்த முதலை அங்கும் இங்கும் அலைந்ததால், அதனைக் கண்ட மக்கள் பீதியடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். இது குறித்து வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, கிராமத்திற்கு வந்த வனத் துறை அதிகாரிகள் முதலையைப் பாதுகாப்பாகப் பிடித்து மீண்டும் காளி ஆற்றில் விடுவித்தனா்.

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காளி ஆற்றில் இருந்து வெளியே வந்த முதலை, டேன்டலி அருகேயுள்ள கோகிலபானா கிராமத்திற்குள் நுழைந்தது. கிராமத்தில் அங்குமிங்கும் அலைந்து திரிந்த முதலையைக் கண்டு மக்கள் பீதியடைந்தனா். பின்னா் அதைக் கைப்பற்றி, மீண்டும் ஆற்றில் விடுவித்தோம். மக்கள் வாழும் பகுதியில் நுழைந்தாலும், அந்த முதலை யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. காளி ஆற்றில் பெரும் எண்ணிக்கையில் முதலைகள் உள்ளன. அதைக் கருத்தில் கொண்டே டேன்டலியில் முதலைப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com