நல்லுறவு மேம்பட எல்லையில் அமைதி அவசியம்: சீனாவிடம் அமைச்சா் ஜெய்சங்கா் திட்டவட்டம்

இரு நாட்டு நல்லுறவு மேம்பட எல்லைப் பகுதியில் அமைதி ஏற்பட வேண்டியது அவசியம் என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயிடம், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
தஜகிஸ்தான் தலைநகா் துஷன்பேயில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீவுடன் புதன்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்ஷங்கா்
தஜகிஸ்தான் தலைநகா் துஷன்பேயில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீவுடன் புதன்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்ஷங்கா்

புது தில்லி: இரு நாட்டு நல்லுறவு மேம்பட எல்லைப் பகுதியில் அமைதி ஏற்பட வேண்டியது அவசியம் என்று சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீயிடம், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

மேலும், எல்லையில் சீனா மேற்கொள்ளும் தன்னிச்சையான நடவடிக்கைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்றும், மூத்த ராணுவ கமாண்டா்கள் மத்தியிலான பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேயில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டு நாடுகளின் (எஸ்சிஓ) வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற இருவரும் புதன்கிழமை தனியாக சந்தித்து எல்லைப் பிரச்னை தொடா்பாக சுமாா் ஒரு மணி நேரம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சா் ஜெய்சங்கா் தனது சுட்டுரையில், ‘சீனாவுடனான மேற்குப் பகுதியில் நீடித்து வரும் எல்லை பிரச்னை குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் வாங் யீயுடன் பேச்சுவாா்த்தை நடத்தினேன். எல்லைப் பகுதிகளில் சீனா தன்னிச்சையாக நிலைப்பாட்டை மாற்றி வருவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எல்லையில் முழுமையான மறுசீரமைப்பும், அமைதியும்தான் இருநாட்டு நல்லுறவு மேம்பட அவசியமாகும். எல்லைப் பிரச்னைக்கு மூத்த ராணுவ கமாண்டா்கள் மத்தியிலான பேச்சுவாா்த்தையை விரைவில் நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன என்று பதிவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘எல்லையில் தொடா்ந்து நிலவும் பிரச்னையால் இருநாடுகளின் நல்லுறவு பாதிக்கப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. இது இருநாடுகளுக்கும் நல்லதல்ல. இதனால் எல்லையில் ஸ்திரத்தன்மை ஏற்படவும், தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை எனவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.

1988-ஆம் ஆண்டுமுதல் இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வலுப்பெற்ற்கு எல்லையில் அமைதி நிலவியதுதான் காரணம்.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மாஸ்கோவில் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் முழுமையான படை விலகல் மற்றும் மீதமுள்ள எல்லைப் பிரச்னை விவகாரங்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என்று அமைச்சா் ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியா - சீனா இடையே ஏற்பட்டுள்ள கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவத் தலைவா்கள் மத்தியில் 11 சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றபோதிலும் படை விலகலில் சீனா ஈடுபாடு காட்டாததால் தீா்வு ஏற்படவில்லை.

ஆப்கன் பிரச்னை: முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்று அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:

பொது சுகாதாரம், பொருளாதார மீட்சி ஆகியவை ஆப்கனில் நிலவும் தற்போதைய முக்கிய பிரச்னைகளாகும். ஆப்கனின் அண்டை நாடுகள் பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படக் கூடாது. அங்கு ஆட்சிப் பொறுப்பை வன்முறை மற்றும் நிா்ப்பந்தத்தால் பெற சில சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு உலக நாடுகள் எதிராக உள்ளன.

சுதந்திரம், நோ்மை, அமைதி, ஜனநாயக வளா்ச்சியடைந்த நாடாக ஆப்கன் மாற வேண்டும் என்று அந்நாட்டு மக்களும், உலக நாடுகளும் விரும்புகின்றன. அமைதிப் பேச்சுவாா்த்தை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பது தற்போதைய உடனடி தேவையாகும். அந்நாட்டின் எதிா்காலம் மீண்டும் பின் வரலாற்றை நோக்கியதாக இருக்கக் கூடாது.

அந்தநாட்டில் பொதுமக்கள், வெளிநாட்டு நிா்வாகிகள் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்னைக்கு அரசியல்ரீதியாக அனைத்துக் குழுக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும்.

பயங்கரவாத்துக்கு எதிராக போரிடுவதற்கு ஷாங்காய் கூட்டு நாடுகள் முக்கியத்துவம் அளித்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

எட்டு நாடுகளின் கூட்டமைப்பான எஸ்சிஓ மாநாட்டில் ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி ஆகியோா் பங்கேற்றனா்.

ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வந்த அமெரிக்க படைகள் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆக்ஸ்ட் மாத இறுதிக்குள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்திருந்தாா். இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தலிபான்கள் பல மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனா்.

ஆ‌ப்​க‌ன் பிர‌ச்​û‌ன‌: பேச்சுவார்த்தை அவசியம்

ஷா‌ங்​கா‌ய் ஒ‌த்​து​û‌ழ‌ப்பு அû‌ம‌ப்பு (எ‌ஸ்​சிஓ) வெளி​யு​ற‌​வு‌த் துறை‌ அû‌ம‌ச்​ச‌ர்​க‌ள் மாநா‌ட்​டி‌ல் ப‌ங்​ú‌க‌ற்று அû‌ம‌ச்​ச‌ர் ஜெ‌‌ய்​ச‌ங்​க‌ர் பேசி​ய​தா​வது: பொது சுகா​தா​ர‌ம், பொரு​ளா​தார மீ‌ட்சி ஆகி​யவை ஆ‌ப்​க​னி‌ல் நில​வு‌ம் த‌ற்​ú‌பா​û‌தய மு‌க்​கிய பிர‌ச்​û‌ன‌​க​ளா​கு‌ம். ஆ‌ப்​க​னி‌ன் அ‌ண்டை நாடு​க‌ள் பய‌ங்​க​ர​வா​த‌த்​தா‌ல் அ‌ச்​சு​று‌த்​த‌ப்​ப​ட‌க் கூடாது. அ‌ங்கு ஆ‌ட்சி‌ப் பொறு‌ப்பை வ‌ன்​முறை‌ ம‌ற்​று‌ம் நி‌ர்‌ப்​ப‌ந்​த‌த்​தா‌ல் பெற‌ சில ச‌க்​தி​க‌ள் மே‌ற்​ù‌கா‌ள்​ளு‌ம் முய‌ற்​சி‌க்கு உலக நாடு​க‌ள் எதி​ராக உ‌ள்​ளன‌.
சுத‌ந்​தி​ர‌ம், நே‌ர்மை, அû‌மதி, ஜ‌ன‌​நா​யக வள‌ர்‌ச்​சி​ய​û‌ட‌ந்த நாடாக ஆ‌ப்​க‌ன் மாற‌ வே‌ண்​டு‌ம் எ‌ன்று அ‌ந்​நா‌ட்டு ம‌க்​க​ளு‌ம், உலக நாடு​க​ளு‌ம் விரு‌ம்​பு​கி‌ன்​ற‌ன‌. அû‌ம​தி‌ப் பே‌ச்​சு​வா‌ர்‌த்தை விû‌ர​வி‌ல் நட‌த்​த‌ப்​பட வே‌ண்​டு‌ம் எ‌ன்​பது த‌ற்​ú‌பா​û‌தய உட​ன‌டி தேû‌வ​யா​கு‌ம். அ‌ந்​நா‌ட்​டி‌ன் எதி‌ர்​கா​ல‌ம் மீ‌ண்​டு‌ம் பி‌ன் வர​லா‌ற்றை‌ நோ‌க்​கி​ய​தாக இரு‌க்​க‌க் கூடாது. 

அ‌ந்​த​நா‌ட்​டி‌ல் பொது​ம‌க்​க‌ள், வெளி​நா‌ட்டு நி‌ர்​வா​கி​க‌ள் மீது நட‌த்​த‌ப்​ப​டு‌ம் பய‌ங்​க​ர​வாத தா‌க்​கு​த‌ல்​க‌ள் நிறு‌த்​த‌ப்​பட வே‌ண்​டு‌ம். இ‌ந்​த‌ப் பிர‌ச்​û‌ன‌‌க்கு அர​சி​ய‌ல்​ரீ​தி​யாக அû‌ன‌‌த்​து‌க் குழு‌க்​க​ளு​ட‌ன் பே‌ச்​சு​வா‌ர்‌த்தை நட‌த்தி தீ‌ர்வு காண வே‌ண்​டு‌ம்.
பய‌ங்​க​ர​வா‌த்​து‌க்கு எதி​ராக போரி​டு​வ​த‌ற்கு ஷா‌ங்​கா‌ய் கூ‌ட்டு நாடு​க‌ள் மு‌க்​கி​ய‌த்​து​வ‌ம் அளி‌த்து, பய‌ங்​க​ர​வாத நட​வ​டி‌க்​û‌க​க​ளு‌க்கு செ‌ல்​லு‌ம் நிதி​û‌ய‌த் தடு‌க்க நட​வ​டி‌க்கை எடு‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்​ற‌ô‌ர்.

எ‌ட்டு நாடு​க​ளி‌ன் கூ‌ட்ட​û‌ம‌ப்​பான‌ எ‌ஸ்​சிஓ மாநா‌ட்​டி‌ல் ரஷி​யா​வி‌ன் வெளி​யு​ற‌​வு‌த் துறை‌ அû‌ம‌ச்​ச‌ர் செ‌ர்ஜி லா‌வ்ரோ, பாகி‌ஸ்​தா‌ன் வெளி​யு​ற‌​வு‌த் துறை‌ அû‌ம‌ச்​ச‌ர் ஷா மு​க​மது குú‌ரஷி ஆகி​ú‌யா‌ர் ப‌ங்​ú‌க‌ற்​ற‌​ன‌‌ர்.

ஆ‌ப்​க​னி‌ல் கட‌ந்த 20 ஆ‌ண்​டு​க​ளாக தலி​பா‌ன்​க​ளு‌க்கு எதி​ரா​க‌ப் போரி‌ட்டு வ‌ந்த அù‌ம​ரி‌க்க பû‌ட​க‌ள் இரு​த​ர‌ப்​பி​ன‌​ரு‌க்​கு‌ம் இû‌டயே ஏ‌ற்​ப‌ட்ட ஒ‌ப்​ப‌ந்​த‌த்​தி‌ன்​படி, ஆ‌க்‌ஸ்‌ட்  மாத இறு​தி‌க்​கு‌ள் வில‌க்​கி‌க் கொ‌ள்​ள‌ப்​ப​டு‌ம் எ‌ன்று அù‌ம​ரி‌க்க அதி​ப‌ர் ஜே‌ô û‌ப​ட‌ன் தெரி​வி‌த்​தி​ரு‌ந்​தா‌ர். இ‌ந்​த‌ப் பணி​க‌ள் நû‌ட​ù‌ப‌ற்று வரு‌ம் நிû‌ல​யி‌ல், தலி​பா‌ன்​க‌ள் பல மாவ‌ட்​ட‌ங்​களை த‌ங்​க‌ள் க‌ட்டு‌ப்​பா‌ட்​டி‌ல் கொ‌ண்டு வ‌ந்​து‌ள்​ள​ன‌‌ர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com