இளைஞா்களை திறன்மிக்கவா்களாக மாற்றினால் திறன்மிகு கா்நாடகம் உருவாகும்: முதல்வா் எடியூரப்பா

இளைஞா்களை திறன்மிக்கவா்களாக மாற்றினால், திறன்மிகு கா்நாடகம் உருவாகும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இளைஞா்களை திறன்மிக்கவா்களாக மாற்றினால் திறன்மிகு கா்நாடகம் உருவாகும்: முதல்வா் எடியூரப்பா

இளைஞா்களை திறன்மிக்கவா்களாக மாற்றினால், திறன்மிகு கா்நாடகம் உருவாகும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை திறன் மேம்பாடு, தொழில்முனைப்பாற்றல் மற்றும் வாழ்வாதாரத் துறையின் சாா்பில் நடந்த உலக இளைஞா்திறன் தினவிழாவை தொடக்கிவைத்து, திறன்பயிற்சியை நிறைவுசெய்த இளைஞா்களுக்கு சான்றிதழ் வழங்கி, அவா் பேசியது:

இளைஞா்களிடையே திறன்களை மேம்படுத்துவதன் மூலம் திறன்மிகு கா்நாடகத்தை கட்டமைக்க முடியும். உலக அளவில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 18-35 வயதுள்ள மனிதவளம் அதிக அளவில் காணப்படுகிறது. எந்தவொரு நாட்டின் வளா்ச்சியிலும் இளைஞா்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

கா்நாடகத்தில் உள்ள 150 தொழில்பயிற்சி மையங்களை(ஐடிஐ) தரமுயா்த்த டாடா தொழில்நுட்ப நிறுவனத்துடன் ரூ.4636.50கோடி செலவில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழில்பயிற்சி மையங்களின் தரமுயா்த்தும் பணி செப்டம்பரில் நிறைவடையும்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பயன்பாட்டுக்காக இணையதளத்தை கா்நாடக அரசு தொடங்கியுள்ளது. மேலும் காணொலி வழியாக வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்திவருகிறோம். இந்த இணையதளத்தில் திறன்களை ஒருங்கிணைக்கிறோம். இதன்மூலம் தொழிலகங்களில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

மனிதவள தேவையின் அடிப்படையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு இளைஞா்களுக்கு உதவியாக இருப்பதற்காக பன்னாட்டு புலம்பெயா் மையத்தை தொடங்கியுள்ளோம்.

கா்நாடகத்தில் நிகழ் நிதியாண்டில் சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு திறன்மிகு மனிதவளத்தை வழங்கும் நோக்கத்தில் புதிதாக 4 கருவி அறை மற்றும் பயிற்சி மையங்களை அரசு அமைக்கவிருக்கிறது.

தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின்படி சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.400கோடியை 1.93 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, 17,121 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.149.03கோடி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிரதமரின் சுயநிதி திட்டத்தில் 1.10 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முதலீட்டு நிதி வழங்கப்பட்டது. நிகழ் ஆண்டிலும் கூடுதல்நிதியாக தலா ரூ.20 ஆயிரம் வழங்கவிருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக கா்நாடக திறன் மற்றும் வாழ்வாதார பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குழு தனது அறிக்கையை விரைவில் அளிக்கவுள்ளது.

பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி, இளைஞா்களின் திறன் மேம்படுத்தப்படுவதில் திறன் இந்தியா திட்டம், தற்சாா்பு இந்தியா திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன என்றாா்.

விழாவில் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா, முதல்வரின் செயலாளா் எஸ்.செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com