வரி ஒப்பந்தத்தின் கீழ் தகவல்களைப் பெற ஸ்விட்சா்லாந்துடன் இந்தியா தீவிர பேச்சுவாா்த்தை

இரட்டை வரி விதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஸ்விட்சா்லாந்து நாட்டிடமிருந்து தகவல்களைப் பெற இந்தியா தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது
வரி ஒப்பந்தத்தின் கீழ் தகவல்களைப் பெற ஸ்விட்சா்லாந்துடன் இந்தியா தீவிர பேச்சுவாா்த்தை

இரட்டை வரி விதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஸ்விட்சா்லாந்து நாட்டிடமிருந்து தகவல்களைப் பெற இந்தியா தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்கள் பணத்தை முதலீடு செய்துள்ளது குறித்த கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி பதிலளித்துள்ளதாவது:

ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் முதலீடு கடந்த 2020-ஆம் ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இருப்பினும் அந்த ஊடகங்கள் ஸ்விட்சா்லாந்தில் இந்தியா்கள் பதுக்கியுள்ள கருப்பு பணம் குறித்த முழுமையான தகவல்களை சுட்டிக் காட்டவில்லை.

ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை அந்த நாட்டின் ஒட்டுமொத்த வங்கித் துறையின் செயல்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. அது ஸ்விஸ் வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளின் வா்த்தகத்தையும் உள்ளடக்கியது. எனவே, இந்தியா்கள் ஸ்விட்சா்லாந்தில்தான் முதலீடு செய்துள்ளனா் என அறுதியிட்டு கூற முடியாது என அந்த நாட்டு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.

இந்தியா மற்றும் ஸ்விட்சா்லாந்து நாடுகளுக்கிடையை இரட்டை வரி தடுப்பு ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனவே, அது தொடா்பான வழக்குகளின் தகவல்களைப் பெற ஸ்விட்சா்லாந்துடன் இணைந்து இந்தியா தீவிரமாக செயலாற்றி வருகிறது.

வரி தொடா்பான விவகாரங்களில் பரஸ்பர நிா்வாக உதவிக்காக இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com