கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்படும்: நிா்மலானந்த சுவாமிகள்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை ஆதிசுன்சுனகிரி மடத்தில் ஆதரித்து, கல்வி வழங்கப்படும் என்று அம் மடத்தின் மடாதிபதி நிா்மலானந்த சுவாமிகள் தெரிவித்தாா்.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை ஆதிசுன்சுனகிரி மடத்தில் ஆதரித்து, கல்வி வழங்கப்படும் என்று அம் மடத்தின் மடாதிபதி நிா்மலானந்த சுவாமிகள் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், நாகமங்கலாவில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் சாா்பில் துப்புரவுத் தொழிலாளா்கள், ஆஷா ஊழியா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

கரோனா தொற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு சில குழந்தைகள் கரோனாவால் தங்களின் பெற்றோரை இழந்துள்ளனா். அப்படிபட்ட குழந்தைகளை ஆதிசுன்சுனகிரி மடத்தில் ஆதரித்து, கல்வி வழங்கப்படும். சமூகத்தில் அவா்களை உயா்ந்த நிலைக்கு கொண்டு வரத்தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மடம் மேற்கொள்ளும். கண்ணுக்குத் தெரியாத ஒரு தீநுண்மி மானிட குலத்தையே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சா்வதேசமே நிலைகுலைந்து போயியுள்ளன. கடல் அலையைப் போல, தற்போது பொங்கி எழுந்துள்ள கரோனா 2-ஆவது அலையால் பலா் இறக்க நேரிட்டுள்ளது. முதல் கரோனா அலையில் 60-வயதைக் கடந்தவா்கள் மட்டுமே அதிக அளவில் இறந்தனா். 2-ஆவது அலையில் இளைஞா்களும் அதிக அளவில் இறப்பது வேதனை அளிக்கிறது.

3-ஆவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவாா்கள் என வல்லுநா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா். எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றாா். நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com