கோவாவைவிட மகாராஷ்டிரத்தில்தான் அதிக கரோனா பலி: சி.டி. ரவி

​கோவாவைவிட மகாராஷ்டிரத்தில்தான் அதிக கரோனா பாதிப்புகளும், கரோனா பலிகளும் பதிவாகியுள்ளதாக பாஜக தேசியப் பொதுச்செயலர் சி.டி. ரவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கோவாவைவிட மகாராஷ்டிரத்தில்தான் அதிக கரோனா பாதிப்புகளும், கரோனா பலிகளும் பதிவாகியுள்ளதாக பாஜக தேசியப் பொதுச்செயலர் சி.டி. ரவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

கோவாவைவிட மகாராஷ்டிரம் பன்மடங்கு பெரிய மாநிலம் என்ற நிதர்சத்தைப் புறந்தள்ளி சி.டி. ரவி இவ்வாறு பேசியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவாவில் அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களைச் சந்தித்து திட்ட வகுக்க சி.டி. ரவி மற்றும் பி.எல். சந்தோஷ், தேசியப் பொதுச்செயலர் (அமைப்பு) கோவாவில் முகாமிட்டுள்ளனர். 

இந்த நிலையில் பனாஜியில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி. ரவி தெரிவித்தது:

"3 கட்சிகளால் ஆட்சியமைக்கப்படும் மகாராஷ்டிரத்தில் அதிக பலி எண்ணிக்கைகள் மற்றும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கோவாவைவிட அதிக பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கைகள் மகாராஷ்டிரத்தில்தான் பதிவாகியுள்ளன. பெருந்தொற்றை கோவா சிறப்பாகக் கையாண்டுள்ளது. புதிய மருத்துவமனையும்கூட திறக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு மெதுவாக கட்டுப்பாட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com