தில்லியில் கூடுதல் தளர்வுகள்: சந்தைகள், உணவகங்களுக்கு அனுமதி 

தில்லியில் கரோன பரவல் குறைந்ததை தொடர்ந்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் கூடுதல் தளர்வுகள்: சந்தைகள், உணவகங்களுக்கு அனுமதி 

தில்லியில் கரோன பரவல் குறைந்ததை தொடர்ந்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் கரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்.19 ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் 300க்கும் கீழ் குறைந்ததைத் தொடர்ந்து நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், நாளை காலை முதல் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், சிலவற்றிற்கு கட்டுப்பாடுகள் தொடரும். சந்தைகள் மற்றும் பெரு வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் 8 மணி வரை செயல்படலாம். 
உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து ஜூன் 21 ஆம் தேதிவரை மூடப்பட்டு இருக்கும். மத வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. தனியார் அலுவலகங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம். நீச்சல் குளங்கள், மைதானங்கள், விளையாட்டு அரங்குகள், சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை. இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். 
வீடுகளில் மட்டும் திருமணத்திற்கு அனுமதி. அதில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம். ஆட்டோ, இ ரிக்ஷாக்கள், டாக்சிக்களில் 2 பயணிகளுக்கு மேல் அனுமதி கிடையாது. டில்லி மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும். சந்தைகள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை அரசு அடுத்து ஒரு வாரத்திற்கு கண்காணிக்கும். நோய்த்தொற்று அதிகரித்தால் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்படும். இல்லையென்றால் இந்த தளா்வுகள் தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com