மாநிலங்களின் கையிருப்பில் 3.06 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

​மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 29.10 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாநிலங்களின் கையிருப்பில் 3.06 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 29.10 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநிலங்கள் நேரடியாகக் கொள்முதல் செய்தது உள்பட மொத்தம் 29,10,54,050 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வீணானவை உள்பட மொத்தம் 26,10,54,050 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இன்னும் 3.06 கோடி தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த 3 நாள்களில் 24,53,080 தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெறவுள்ளன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,10,554 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 27,66,93,572 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com