வருமானவரி வலைதளப் பிரச்னை: இன்ஃபோசிஸ் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வலைதளம் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவன அதிகாரிகளிடம் மத்திய
வருமானவரி வலைதளப் பிரச்னை: இன்ஃபோசிஸ் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

புது தில்லி: வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வலைதளம் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவன அதிகாரிகளிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். 
வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கு புதிதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் உருவாக்கிய ஜ்ஜ்ஜ்.ண்ய்ஸ்ரீர்ம்ங்ற்ஹஷ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற வலைதளம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதை எளிமையாக்கும் நோக்கில் இந்தப் புதிய வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசும், வருமானவரித் துறையும் தெரிவித்தன. எனினும் அந்த வலைதளத்துக்குள் நுழைய அதிக நேரமாவது, ஆதார் சரிபார்ப்புக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை உருவாக்குவதில் சிக்கல், முந்தைய ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி கணக்கு விவரங்களைப் பெற முடியாதது உள்பட பல தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.
அந்த வலைதளத்தில் உள்ள பிரச்னைகளை சரிசெய்யுமாறு இன்ஃபோசிஸ் நிறுவன அதிகாரிகளிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதுதொடர்பாக அந்த நிறுவன அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை காணொலி வழியாக ஆலோசனை மேற்கொண்டார். 
இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர், மத்திய வருவாய்த் துறை செயலர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ஜகன்நாத் மொஹபாத்ரா, நிதியமைச்சக மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
இந்தக் கூட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: புதிய வலைதளத்தில் நிலவும் பிரச்னைகளை உடனடியாக சரிசெய்யவும், அதன் சேவைகளை மேம்படுத்தவும் இன்ஃபோசிஸ் அதிகாரிகளிடம் நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார். 
பணம் அனுப்பப் பயன்படுத்தப்படும் 15சி/15சிபி படிவங்கள், டிடிஎஸ் அறிக்கைகள், டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ் (டிஎஸ்சி), முந்தைய வருமானவரி கணக்கு விவரங்களை காண்பது உள்ளிட்ட சேவைகள் தொடர்பாக நிலவும் பிரச்னைகள் ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com