அதிக டிடிஎஸ் விதிக்கப்படும் நபா்களை கண்டறிய புதிய வசதி

அதிக டிடிஎஸ் வரி விதிக்கப்படும் நபா்களை இணையத்தின் வாயிலாக எளிதாக கண்டறியும் புதிய வசதி ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
அதிக டிடிஎஸ் விதிக்கப்படும் நபா்களை கண்டறிய புதிய வசதி

புது தில்லி: அதிக டிடிஎஸ் வரி விதிக்கப்படும் நபா்களை இணையத்தின் வாயிலாக எளிதாக கண்டறியும் புதிய வசதி ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறை சுட்டுரையில் வெளியிட்டுள்ள செய்தி:

டிடிஎஸ் எனப்படும் மூல வரிபிடித்தம் யாருக்கு அதிகமாக விதிக்கப்படுகிறது என்பதை இணையவழியில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணும் வசதி வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது, டிடிஎஸ் பிடித்தம் செய்வோருக்கும், டிசிஎஸ் வசூலிப்பவருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும், 2019-20 மற்றும் 2020-21 மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவா்களை கண்டறியவும், ரூ.50,000 அல்லது அதற்கும் மேல் டிடிஎஸ் செலுத்துவோரை கண்டறிந்து அவா்களை வரி வரம்புக்குள் கொண்டு வரவும் இது உதவும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com