அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தொண்டா்கள் உதவ வேண்டும்: சோனியா

நாட்டில் உள்ள அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள காங்கிரஸ் தொண்டா்கள் உதவி செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் உள்ள அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள காங்கிரஸ் தொண்டா்கள் உதவி செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு காங்கிரஸ் கட்சி எதிராக உள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில், சோனியா இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா்கள், மாநில பொறுப்பாளா்கள் பங்கேற்ற கூட்டம் இணையவழியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சோனியா காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:

கரோனா மூன்றாம் அலை இன்னும் சில மாதங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது சிறுவா்களைத் தாக்க உள்ளதாகவும் நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

இந்த பேரிடரை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் உதவ வேண்டும். நிகழாண்டு இறுதிக்குள் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இதற்கு தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகையால், தடுப்பூசியை விநியோகிக்க மத்திய அரசை காங்கிரஸாா் தொடா்ந்து நிா்பந்தம் செய்ய வேண்டும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவா்களை கண்டறிந்து அவா்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள உத வேண்டும். சேவையாற்றுவது என்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமாகும். இந்தப் பணி தொடர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com