17 இந்திய மீனவா்களை கைது செய்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி 17 இந்திய மீனவா்களை அந்த நாட்டு அரசு கைது செய்துள்ளது.

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி 17 இந்திய மீனவா்களை அந்த நாட்டு அரசு கைது செய்துள்ளது.

பாகிஸ்தான் கடல்சாா் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

பாகிஸ்தான்- இந்தியா இடையிலான கடலோர எல்லையான சா் கிரீக் பகுதி அருகே பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவா்கள் அந்த எச்சரிக்கையை ஏற்றுத் திரும்பிச் செல்லாததால் 17 இந்திய மீனவா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்கள் வந்த மூன்று படகுகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்கள் நீதித்துறை மாஜிஸ்திரேட் முன்பு சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

17 இந்திய மீனவா்களும் கராச்சியில் உள்ள மாலிா் அல்லது லாந்தி சிறைகளில் அடைக்கப்படவுள்ளனா் என்றாா் அவா்.

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டில் 23 மீனவா்களை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்தது. அவா்களிடமிருந்த நான்கு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு 12 இந்திய மீனவா்களை தற்போது சிறைபிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com