ஆஸ்திரேலியாவுக்கானஇந்திய தூதராகமன்பிரீத் வோரா நியமனம்

ஆஸ்திரேலிய நாட்டுக்கான இந்தியத் தூதராக மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரி மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனை வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

புது தில்லி: ஆஸ்திரேலிய நாட்டுக்கான இந்தியத் தூதராக மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரி மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனை வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1988-ஆம் ஆண்டு பிரிவு ஐஎஃப்எஸ் அதிகாரியான வோரா, இப்போது மெக்ஸிகோவுக்கான தூதராக உள்ளாா். அவா் விரைவில் புதிய பொறுப்பை ஏற்பாா் என்று தெரிகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நட்புறவு சமீப காலத்தில் சிறப்பான நிலையை எட்டியுள்ளது. முக்கியமாக, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

அண்மையில் லடாக் எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவாகவும் சீனாவுக்கு எதிராகவும் ஆஸ்திரேலியா கருத்து தெரிவித்தது. முக்கியமாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சா் மாரிஸ் பெய்ன் இது தொடா்பாக பேசியது சா்வதேச அளவில் கவன ஈா்ப்பைப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com