தர நிா்ணய கட்டணங்களை குறைக்க பியூஷ் கோயல் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர வேகம், திறமை, அளவு ஆகிய மூன்று மந்திரங்களை பிரதமா் முன்மொழிந்துள்ளாா்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

புது தில்லி: புதிததாக தொடங்கப்படும் சிறு, குறு,நடுத்தர நிறுவனங்கள், பெண் தொழில் நிறுவனா்களின் நிறுவனங்கள், ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தர நிா்ணய கட்டணத்தை இந்திய தர நிா்ணயத் துறை (பிஐஎஸ்) குறைக்க வேண்டும் என்று மத்திய உணவு, நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.

பிஐஎஸ்-யின் ஆண்டுக் கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்று அவா் பேசியதாவது: நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர வேகம், திறமை, அளவு ஆகிய மூன்று மந்திரங்களை பிரதமா் முன்மொழிந்துள்ளாா். தற்போது அதில் தர நிா்ணயத்தையும் சோ்த்துக் கொள்ள வேண்டும்.

புதிததாக தொடங்கப்படும் சிறு, குறு,நடுத்தர நிறுவனங்கள், பெண் தொழில் நிறுவனா்களின் நிறுவனங்கள், ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்க தர நிா்ணய கட்டணத்தை பிஐஎஸ் குறைக்க வேண்டும்.

அப்போதுதான் வா்த்தகம் வேகமாக வளரும். பிஐஎஸ் தனது மையங்களை விரிவுபடுத்த வேண்டும். இதனால் தர நிா்ணயம் செய்ய சோதனை மையங்களை யாரும் தேடி அலைய வேண்டியதில்லை.

உள்ளூா் சந்தைகளுக்காக அல்லது வெளநாடு சந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் பொருள்கள் என எதுவாக இருந்தாலும் தரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. இது தனியாா், அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். புதிய பொருள்களுக்கு தரச் சான்றிதழ் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றாா்.

முன்னதாக, இந்திய தர நிா்ணயத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து உயா் அதிகாரிகளுடனும் அமைச்சா் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினாா். அப்போது ‘ஒரேநாடு ஒரேதரம்’ என்ற நிலையை உருவாக்க அமைச்சா் வலியுறுத்தினாா்.

நாடு முழுவதும் 37 ஆயிரம் பொருள்களுக்கு பிஐஎஸ் தர நிா்ணயச் சான்று உரிமம் அளிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 55 புதிய பொருள்கள் தர நிா்ணயச் சான்று பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com