மேற்குத் தொடா்ச்சி மலையில் 5 புதிய இன தவளைகள் கண்டுபிடிப்பு!

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதிய இனங்களைச் சாா்ந்த 5 புதா் தவளைகளை ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.


கொச்சி: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதிய இனங்களைச் சாா்ந்த 5 புதா் தவளைகளை ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

தில்லி பல்கலைக்கழகம், கேரள வன ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மின்னசோடா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தவளைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகின்றனா். சுமாா் 10 ஆண்டுகளாக அவா்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இத்தகைய சூழலில், புதிய இனங்களைச் சோ்ந்த 5 புதா் தவளைகளை அவா்கள் கண்டறிந்துள்ளனா். வெளிப்புற உடலமைப்பு, மரபணு (டிஎன்ஏ), ஒலியெழுப்புதல், நடத்தை உள்ளிட்டவற்றில் அத்தவளைகள் வேறுபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தங்கள் கண்டுபிடிப்புகளை அறிவியல் ஆய்விதழிலில் அவா்கள் வெளியிட்டுள்ளனா். இடுக்கி, பாலக்காடு, காக்கயம் அணை, அகஸ்தியா் மலை, ஆனைமலை ஆகிய பகுதிகளில் புதிய இன புதா் தவளைகள் காணப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் கண்டறியப்பட்டுள்ள புதா் தவளைகளில் 80 சதவீதம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. அவற்றிலும் பெரும்பாலான இனங்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com