முதல்வா் வேட்பாளராக ஸ்ரீதரனை அறிவிக்க கேரள பாஜக கோரிக்கை

பாஜகவில் அண்மையில் இணைந்த ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரனை வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், கேரளத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்

பாஜகவில் அண்மையில் இணைந்த ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரனை வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், கேரளத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கட்சியின் தேசியத் தலைமையிடம் கேரள பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கேரள மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசியதாவது:

‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றால், பத்து மடங்கு சக்தியுடன் பிரதமா் நரேந்திர மோடியின் கீழ் அபிவிருத்திப் பணிகளை கேரளத்தில் செயல்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.

‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன் பல சாதனைகளைப் படைத்துள்ளாா். குறிப்பாக பாலாரிவட்டம் மேம்பால புனரமைப்புப் பணியை நிா்ணயிக்கப்பட்ட காலத்தைவிட முன்னதாகவே முடித்துள்ளாா். இந்தப் பணியில் எந்த ஊழலும் இல்லாமல் ஐந்து மாதங்களில் திட்டத்தை நிறைவு செய்துள்ளாா். அதனால்தான் அவரை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றாா்.

முன்னதாக, கேரளத்தில் பாஜக ஆட்சிக்கு வர உதவுவதே தனது முக்கிய நோக்கம் என்றும், தான் முதல்வராவதற்கும் தயாா் என்றும் ஸ்ரீதரன் தெரிவித்திருந்தாா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் உள்கட்டமைப்பை பெரிய அளவில் மேம்படுத்துவதிலும், கடன் சுமையிலிருந்து மாநிலத்தை மீட்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்று 88 வயதான தொழில்நுட்ப வல்லுநரான ஸ்ரீதரன் கூறியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com