கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் வேளாண் அமைச்சர்

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தில்லியிலுள்ள ராம் மனோகர் லால் மருத்துவமனையில் முதல்கட்ட தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தில்லியிலுள்ள ராம் மனோகர் லால் மருத்துவமனையில் முதல்கட்ட தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கரோனா முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று (மார்ச் 6) மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்கட்ட கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

தில்லியிலுள்ள ராம் மனோகர் லால் மருத்துவமனை சுகாதார ஊழியர்கள் தோமருக்கு தடுப்பூசி செலுத்தினர்.

இதேபோன்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, சதானந்த கெளடா, தலாய் லாமா உள்ளிட்டோருக்கும் இன்று முதல்கட்ட கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com