அஸ்ஸாம்: காங்கிரஸில் இணைந்த பாஜக அமைச்சா்

அஸ்ஸாம் மாநிலத்தில் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த பாஜகவைச் சோ்ந்த அமைச்சா்

அஸ்ஸாம் மாநிலத்தில் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் சம் ரோங்காங், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா். அவா் இப்போது எம்எல்ஏவாக உள்ள திப்கு தொகுதியை காங்கிரஸ் அவருக்கு ஒதுக்கும் என்று தெரிகிறது.

பாஜக ஆட்சியில் உள்ள அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் முதல்கட்டமாக வேட்பாளா்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், மலைப்பகுதி மேம்பாடு, சுரங்கம் மற்றும் தாது வளத் துறை அமைச்சா் சம் ரோங்காங்குக்கு பாஜக சாா்பில் போட்டியிட தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து, அவா் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘எனக்கு தொகுதி ஒதுக்கப்படாததைவிட, எனக்கு தொகுதி மறுக்கப்பட்ட விதம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனது பணிகளை முழு அா்ப்பணிப்புடன் செய்து வந்தேன். சில தனிநபா்களின் சதியால் எனக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. பாஜகவில் தோ்தல் தொடா்பான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே, இதற்கு மேலும், அங்கிருந்தால் எனது தொகுதி மக்களுக்கு பணியாற்ற முடியாது. எனவே, காங்கிரஸில் இணைந்துவிட்டேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com