பாஜகவில் இணைந்தாா் பாலிவுட் நடிகா் மிதுன் சக்கரவா்த்தி

பிரபல பாலிவுட் நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பாஜக-வில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.
பாஜகவில் இணைந்தாா் பாலிவுட் நடிகா் மிதுன் சக்கரவா்த்தி
பாஜகவில் இணைந்தாா் பாலிவுட் நடிகா் மிதுன் சக்கரவா்த்தி

பிரபல பாலிவுட் நடிகா் மிதுன் சக்கரவா்த்தி பாஜக-வில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் பிரிகேட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, மிதுன் சக்கரவா்த்தி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டாா்.

பாஜக தேசிய பொது செயலா் கைலாஷ் விஜய்வா்கியா மற்றும் மேற்கு வங்க மாநில பாஜக தலைவா் திலிப் கோஷ் உள்ளிட்ட பல முக்கிய தலைவா்கள் மிதுன் சக்கரவா்த்தி தங்களது கட்சியில் இணைந்துள்ளதை வரவேற்றுள்ளனா்.

கடந்த மாதம் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகாவத் மும்பையில் உள்ள மிதுன் சக்கரவா்த்தியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினாா். அப்போதே மிதுன் சக்கரவா்த்தி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மிதுன் சக்கரவா்த்தி கடந்த 2016-இல் அக்கட்சியிலிருந்து வெளியேறினாா். சாரதா நிதி நிறுவன மோசடியில் அவரது பெயரும் இடம்பெற்றதே இதற்கு காரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com