மீண்டும் கரோனா அபாயப் பகுதியாக மாறத் தயாராகிறதா தாராவி?

மும்பையிலிருக்கும் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இந்த மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை 272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவி: மார்ச் மாதத்தில் 272 பேருக்கு கரோனா: 62% அதிகம்
தாராவி: மார்ச் மாதத்தில் 272 பேருக்கு கரோனா: 62% அதிகம்


மும்பையிலிருக்கும் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இந்த மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை 272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 168 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் 62 சதவீதம் கரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது.

சுமார் 2.5 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட தாராவி குடிசைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்திருப்பது, ஒரு அபாய மணியை அடித்திருக்கிறது. உடனடியாக சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயாராகியுள்ளனர். கடந்த ஆண்டைப் போல அல்லாமல், இந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாராவியில் ஒரு நாள் கரோனா பாதிப்பு, பிப்ரவரி மாதம் முழுவதும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. ஆனால், மார்ச் மாதம் தொடங்கியது முதலே, நிலைமை தலைகீழாக மாறியதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மார்ச் 19-ஆம் தேதி வரை 272 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 72 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை தாராவில் 4,133 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, 3745 பேர் குணமடைந்துள்ளனர். 316 பேர் பலியாகிவிட்டனர்.

சுமார் 6.5 லட்சம் பேர் வசிக்கும் தாராவியில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் கடினம். சுமார் 8 முதல் 10 பேர் 10க்கு 10 அடி அறையில்தான் தாங்கியிருப்பார்கள். இரண்டு பக்கம் கூரை வீடுகளுடன் குறுகியச் சாலையில்தான் அத்துனைப் பேரும் கடந்து செல்ல வேண்டும். அதற்குள் பல சிறு, குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் முதல் கரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டு 20 நாள்களில் அதாவது கடந்த 2020, ஏப்ரல் 1-ஆம் தேதி தாராவியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதுமுதலே கடுமையாக அதிரித்து, கரோனா அபாயப் பகுதியாக தாராவி மாறியது. அப்படியே உயர்ந்து கடந்த மே மாதம் முதல் வாரத்தில் ஒரே நாளில் 94 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதே, ஒரு நாளில் பதிவான அதிகபட்சமாக பாதிப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com