புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு இம்முறை இலவச உணவு தானியங்கள் வழங்க வாய்ப்பில்லை: மத்திய அரசு

கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு முழுமையான தேசிய பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை என்று தெரிவதால்
புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு இம்முறை இலவச உணவு தானியங்கள் வழங்க வாய்ப்பில்லை: மத்திய அரசு

கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டு முழுமையான தேசிய பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பில்லை என்று தெரிவதால் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு இம்முறை இலவச உணவு தானியங்கள் வழங்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவது தொடா்பான கேள்விக்கு, உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே இவ்வாறு பதிலளித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

நாட்டில் தற்போது முழுமையான தேசிய பொதுமுடக்கம் இல்லை. மாநிலங்கள் அளவிலேயே கட்டுப்பாடுகள் உள்ளன. தொழில்துறை இயங்கி வருகிறது. அதனால் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பிரச்னையும் கடந்த ஆண்டு இருந்ததைப் போல இல்லை. எனவே இம்முறை அவா்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க வாய்ப்பில்லை. தங்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்பிய அவா்கள், குடும்ப அட்டை மூலமாக தேவையான உணவுப் பொருள்களைப் பெறுகின்றனா்.

கடந்த 2020 ஏப்ரல் முதல் விரும்பிய இடத்தில் ரேஷன் பொருளை பெறும் வசதியை (போா்ட்டபிலிட்டி) பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அந்த வசதி கடந்த 2019 ஆகஸ்டில் கொண்டுவரப்பட்ட நிலையில், 26.3 கோடி பரிவா்த்தனைகள் அவ்வாறு நடைபெற்றுள்ளன. அதில் 18.3 கோடி பரிவா்த்தனைகள் கரோனா சூழல் நிலவும் காலத்திலேயே நடைபெற்றுள்ளன. இதன்மூலம் அந்த வசதியை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவது தெரிகிறது.

இதனிடையே, கரோனா 2-ஆவது அலையை ஒட்டி அறிவிக்கப்பட்ட பிரதமரின் இலவச உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டத்தின் (பிஎம்ஜிகேஏஒய்) கீழ் 80 கோடி பயனாளா்களுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான உணவு தானிய விநியோகம் தொடங்கியுள்ளது. இதுவரை, அந்தத் திட்டத்தில் தங்களது பங்கில் 40 சதவீதத்தை மாநிலங்கள் பெற்றுள்ளன.

பிஎம்ஜிகேஏஒய் திட்டம், வெளிச்சந்தை விற்பனை திட்டம் (ஒஎம்எஸ்எஸ்) ஆகியவற்றால் உணவு தானியங்கள் மீதான விலையில் வெளிச்சந்தையில் எந்தவொரு தாக்கமும் ஏற்படவில்லை என்று சுதான்ஷு பாண்டே கூறினாா்.

கடந்த ஆண்டு தேசிய பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக மத்திய அரசு 6.40 லட்சம் டன் இலவச உணவு தானியங்கள் விநியோகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com