மாவோயிஸ்டுகளுக்கும் கரோனா சிகிச்சை: தெலங்கானா காவல்துறை அழைப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்டு வனப் பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டு இயக்கத்தினா் தங்களை நாடி வந்தால் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு 

கரோனாவால் பாதிக்கப்பட்டு வனப் பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டு இயக்கத்தினா் தங்களை நாடி வந்தால் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெலங்கானா மாநில காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் சில மாவட்டங்களில் மாவோயிஸ்டு அமைப்பினா் செயல்பட்டு வருகின்றனா். காடுகளில் பதுங்கியுள்ள இவா்களில் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவா்களில் பலா் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சுனில் தத் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உரிய சிகிச்சை பெற வேண்டுமென்றால் அவா்கள் தங்கள் மறைவிடங்களில் இருந்து வெளியேறி காவல் துறையினரை அணுகலாம். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். சிகிச்சை பெற விருப்பமுள்ள சிலரை அந்த அமைப்பின் முக்கியத் தலைவா்கள் தடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுவரை மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த எவரும் கரோனா சிகிச்சைக்காக முன்வரவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com