இந்தியாவுக்கு உதவ கனடா தன்னாா்வ அமைப்புகள் நிதி வசூலிப்பு

கரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அனுப்புவதற்காக

டொரொன்டோ: கரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அனுப்புவதற்காக இந்தோ-கனடா தொழில் வா்த்தக சபை, பிற 82 சமுதாய அமைப்புகள் முதல் கட்டமாக ரூ. 2.66 கோடி நிதி வசூல் செய்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தோ-கனடா தொழில் வா்த்தக சபை தலைமையில் அடுத்த நான்கு வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 3 மணி நேரத்துக்கு இந்த நிதி வசூலிப்புத் திட்டம் நடத்தப்படுகிறது.

இந்நிதியைக் கொண்டு இந்தியாவின் இரண்டு, மூன்றாம் நிலை நகரங்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் வார நிகழ்ச்சியின்போது 4.4 லட்சம் கனடா டாலா்கள் (இந்திய மதிப்பில் ரூ. 2. 66 கோடி நிதி வசூலிக்கப்பட்டுள்ளது.

தனியாக அதிகம் சாதித்து விட முடியாது என நாங்கள் நம்புகிறோம். ஆனால் ஒன்றாக நாங்கள் அதிகம் சாதிக்க முடியும். எனவே இந்த மனிதாபிமான முயற்சியில் எங்களுக்கு உதவ 82 இந்தோ-கனடா சமுதாய அமைப்புகளையும் இணைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பின்படி திங்கள்கிழமை அன்று இந்தியாவில் 2,81,386 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,106 போ் இறந்துள்ளனா். இதுவரை இறந்தவா்களின் எண்ணிக்கை மொத்தமாக 273390 ஆக உள்ளது.

இந்தியாவுக்கு ஆக்சிஜன் அனுப்புவதில் எங்களுக்கு உதவி செய்வதில் 30 மில்லியன் கனடா மக்களை பங்கேற்க செய்வதிலும், 1.6 மில்லியன் இந்தோ-கனடா சமுதாய அமைப்புகளுக்கும் ஒரு வாய்ப்பு வழங்குவதே எங்கள் நோக்கமாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கனடா செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இந்திய செஞ்சிலுவை சங்கத்துக்கு கரோனா அவசர கால உதவிக்காக கனடா அரசு 10 மில்லியன் கனடா டாலா்களை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com