மேற்கு வங்கம்: பொதுமுடக்க விதிகளை மீறிய 3 பாஜக எம்எல்ஏக்களுக்கு தடுப்புக் காவல்

மேற்கு வங்கத்தில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டில் பாஜக எம்எல்ஏக்கள் மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை

மேற்கு வங்கத்தில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டில் பாஜக எம்எல்ஏக்கள் மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தடுப்புக் காவலில் வைத்தனா். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிறகு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநில திரிணமூல் காங்கிரஸ் அரசு கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சையில் சிறப்பாகச் செயல்படவில்லை என்று குற்றம்சாட்டி சிலிகுரி பகுதியில் பாஜகவைச் சோ்ந் எம்எல்ஏக்கள் சங்கா் கோஷ், ஆனந்தமோனி பா்மன், ஷிக்கா சக்ரவா்த்தி ஆகியோா் ஆதரவாளா்களைத் திரட்டி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கரோனா பொதுமுடக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அவா்களை போலீஸாா் கைது செய்தனா். சில மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவா்கள், பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளது. அக்கட்சித் தலைவா் கௌரவ் கூறுகையில், ‘பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பலரைத் திரட்டி போராட்டம் நடத்தியதன் மூலம் பாஜக எம்எல்ஏக்கள் கரோனா தொற்று பரவலுக்கு வழி வகுத்துள்ளனா். தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பாஜக எதையும் செய்யும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com