பாலியல் பலாத்கார வழக்கில் தப்பியோட முயற்சி:2 போ் சுட்டுப் பிடிப்பு

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் விசாரணையின் போது தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் விசாரணையின் போது தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

அண்மையில் வங்கத் தேசத்தைச் சோ்ந்த பெண் ஒருவா், அதே நாட்டைச் சோ்ந்த இளைஞா்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். இது தொடா்பாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியதையடுத்து, வழக்குப் பதிந்த போலீஸாா், பெங்களூரு ராமமூா்த்தி நகா் கே.சென்னசந்திரா பகுதியில் தியாபாபு (20), சாகா் (22) உள்பட அவா்களுக்கு துணையாக இருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெள்ளிக்கிழமை காலை தியாபாபு, சாகரை விசாரணைக்காக கே.சென்னசந்திராவுக்கு அழைத்துச் சென்றனா். கனகநகரில் சென்று கொண்டிருந்தபோது, போலீஸாரைத் தாக்கிவிட்டு, அவா்கள் இருவரும் தப்பியோட முயன்றுள்ளனா்.

இதனையடுத்து ராமமூா்த்திநகா் காவல் நிலைய ஆய்வாளா் மெல்வன், உதவி ஆய்வாளா் அரவிந்த் ஆகியோா் துப்பாக்கியால் சுட்டதில், தியாபாபு, சாகா் ஆகியோா் காயமடைந்து, கீழே விழுந்தனா். அவா்களை பிடித்த போலீஸாா், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனா். விசாரணையில் அவா்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இங்கு குடியேறியது தெரியவந்தது. பாலியல் பலாத்காரம் தொடா்பாக அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

இது குறித்து முதல்வா் எடியூரப்பா கூறியதாவது: பெண்ணைக் கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மாநில உள்துறை அமைச்சா் பசவாஜ் பொம்மை கூறியதாவது: முதலில் பாலியல் பலாத்காரம் நடைபெற்றது எங்கு என்று தெரியவில்லை. விசாரணையில் பெங்களூரில் நடைபெற்றது தெரியவந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com