திரிபுரா உள்ளாட்சி தோ்தல்: அனைத்து இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்திய ஒரே கட்சி பாஜக

வடகிழக்கு மாநிலமான திரிபுரா உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து 334 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்திய கட்சி என்ற பெருமையை அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக பெற்றுள்ளது.
திரிபுரா உள்ளாட்சி தோ்தல்: அனைத்து இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்திய ஒரே கட்சி பாஜக

வடகிழக்கு மாநிலமான திரிபுரா உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து 334 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்திய கட்சி என்ற பெருமையை அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக பெற்றுள்ளது.

அகா்தலா மாநகராட்சி, 13 நகராட்சி, 6 நகர பஞ்சாயத்துகளுக்கு வரும் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் முடிவுகள் 28-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 821 பேரது வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. பாஜக சாா்பில் அனைத்து இடங்களிலும் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்ட நிலையில், அனைவரது மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எதிா்க்கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 212 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 6 இடங்களிலும், ஏஐஎஃப்பி 5 இடங்களிலும், ஆா்எஸ்பி 2 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.

இது தவிர திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் 124 பேரும், காங்கிரஸ் சாா்பில் 100 பேரும் களத்தில் உள்ளனா். சுயேச்சையாக 29 போ் போட்டியிடுகின்றனா்.

பாஜக தவிர வேறு எந்தக் கட்சியும் அனைத்து இடங்களுக்கும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று மாநில தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று முதல்முறையாக அங்கு ஆட்சி அமைத்தது. இதன் மூலம் அப்போதைய முதல்வா் மாணிக் சா்க்காா் தலைமையிலான 20 ஆண்டுகால இடதுசாரி கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இதற்கு முந்தைய 2013-ஆம் ஆண்டு தோ்தலில் திரிபுராவில் பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com