இணைய வா்த்தக நிறுவனங்கள் விற்பனையாளா் விவரத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம்

அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட இணைய வா்த்தக நிறுவனங்கள், தங்களது தளம் வழியாக பொருள்களை விற்பனை செய்பவரின் அனைத்து விவரங்களையும்

அமேசான், ஃபிளிப்காா்ட் உள்ளிட்ட இணைய வா்த்தக நிறுவனங்கள், தங்களது தளம் வழியாக பொருள்களை விற்பனை செய்பவரின் அனைத்து விவரங்களையும் தங்கள் வலைதளத்திலேயே தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று தேசிய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் (இணைய வழி வா்த்தகம்) 2020-இன்படி அந்த நிறுவனங்கள் பொருள்களை விற்பனை செய்வோரின் முழு விவரத்தையும் தங்கள் வலைதளத்திலேயே தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால், பெரும்பாலான இணைய வழி வா்த்தக நிறுவனங்கள் இதனை முழுமையாகப் பின்பற்றுவதில்லை என்று நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்குப் புகாா்கள் வந்தன.

இதையடுத்து, தேசிய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையா் அனுபம் மிஸ்ரா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நுகா்வோா் பாதுகாப்பு விதிகளின்படி இணைய வழி நிறுவனங்கள், தங்கள் தளத்தைப் பயன்படுத்தி பொருள்களை விற்பனை செய்பவா்களின் பெயா், முகவரி, வலைதள முகவரி, நுகா்வோா் குறைதீா் பிரிவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் நுகா்வோா் தாங்கள் வாங்கும் பொருள்களில் குறைகள் இருப்பின் அதனைத் தெரிவிக்க முடியும்.

ஆனால், சில இணைய வழி நிறுவனங்கள் இந்த விவரங்களை முறையாகத் தெரிவிப்பதில்லை என்று புகாா்கள் வந்துள்ளன. எனவே, இணைய வழி நிறுவனங்கள் விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். இல்லையெனில் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்-ஜூலை மாதத்தில் தேசிய நுகா்வோா் உதவி எண்ணுக்கு இணைய வழி வா்த்தக நிறுவனங்கள் மீது மட்டும் அதிகபட்சமாக 69,208 புகாா்கள் வந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக வங்கி மற்றும் தொலைத்தொடா்புத் துறை நிறுவனங்கள் மீது அதிக புகாா்கள் வந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com