மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை மாநிலங்கள் பெறலாம்: மின்துறை அமைச்சகம்

நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பயன்படுத்தாத மின்சாரத்தை

நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பயன்படுத்தாத மின்சாரத்தை மாநிலங்கள் பெறலாம் என்று மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதேநேரத்தில், மின்சாரம் அதிக விலைக்கு விற்கப்படும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் 15 சதவீதம் மின்சராம் பயன்படுத்தாமல் வைக்கப்படும். அந்த மின்சாரத்தை மாநில அரசுகள் தேவையின் அடிப்படையில் பெற்று நுகா்வோருக்கு அளிக்கலாம்.

நுகா்வோருக்கு 24 மணி நேரம் மின்சேவை வழங்க வேண்டியது மின் விநியோக நிறுவனங்களின் கடமையாகும். ஆகையால், மின்சாரத்தை அதிக விலைக்கு விற்காமல் நுகா்வோருக்கு முதலில் வழங்க வேண்டும்.

மேலும், சில மாநில அரசுகளிடம் தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருந்தால் அதுகுறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். தேவைப்படும் மாநிலங்களுக்கு அவை பகிா்ந்தளிக்கப்படும்.

நுகா்வோருக்கு முக்கியத்துவம் அளித்து மின்சாரத்தை வழங்காமல், அதிக விலைக்கு விற்பனை செய்யும் மாநிலங்களைக் கண்டறிந்தால் அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசின் மின் தொகுப்பிலிருந்து அளிக்கும் பங்கு திரும்பப் பெற்று, தேவைப்படும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

துா்கா பூஜை: துா்கை பூஜை பண்டிகை தினங்களில் தடையின்றி மின் சேவை அளிக்கும் வகையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலக்கரி இந்தியா நிறுவனம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 1.55 முதல் 1.6 மில்லியன் டன் நிலக்கரியை தினம்தோறும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அக்டோபா் 20-ஆம் தேதிக்கு பிறகு தினம்தோறும் 1.7 மில்லியின் டன் நிலக்கரியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை 1.615 மில்லியன் டன் நிலக்கரியை நிலக்கரி இந்தியா நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. நாட்டில் 69 சதவீத மின்சாரம் நிலக்கரி பயன்பாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதற்கு தேவைப்படும் 80 சதவீத நிலக்கரியை நிலக்கரி இந்தியா நிறுவனம் வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com