மூன்றாம் அலைக்கான எச்சரிக்கையா? பெங்களூருவில் 2 பேருக்கு புதிய வகை கரோனா

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏஒய்.4.2 ரக கரோனா வைரஸ், பெங்களூருவில் கரோனா பாதித்த 2 நோயாளிகளுக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் அலைக்கான எச்சரிக்கையா? பெங்களூருவில் 2 பேருக்கு புதிய வகை கரோனா
மூன்றாம் அலைக்கான எச்சரிக்கையா? பெங்களூருவில் 2 பேருக்கு புதிய வகை கரோனா

பெங்களூரு: பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏஒய்.4.2 ரக கரோனா வைரஸ், பெங்களூருவில் கரோனா பாதித்த 2 நோயாளிகளுக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட புதிய வகை கரோனா பெங்களூருவில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கர்நாடக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் கூறுகையில், நாட்டில் கரோனா பேரிடர் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை மக்களுக்கு நினைவூட்டவும் எச்சரிக்கவும் வேண்டும் என்றார்.

கரோனா தொற்றின் உருமாறிய வைரஸ் பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அவர்களது மாதிரிகள் கரோனா மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மருத்துவ நிபுணர்களுடன் கலந்து பேசியுள்ளேன். முதல்வரை சந்தித்து அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளேன் என்றார்.

ஒரு வேளை, சோதனையில் அது உறுதி செய்யப்பட்டால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் ஆலோசிக்க வேண்டும். பிரிட்டன் மற்றும் ரஷ்யாவில் இந்த புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக மூன்றாம் கரோனா அலை தொடங்கிவிட்டது.  எனவே, கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுத்தலைவருடன் நான் கலந்தாலோசனை செய்து, அடுத்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

பெங்களூரு மாநகராட்சி சுகாதாரத் துணை ஆணையர் திரிலோக் சந்திரன் கூறுகையில், புதிய வகை கரோனா பாதித்தவர்கள் இரண்டு பேருமே கரோனா அறிகுறிகள் ஏதுமின்றி இருந்தாகத் தெரிவித்துள்ளார்.

அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் நிலை என்ன?
அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, குணமடைந்தவர்கள். அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே, புதிய வகை கரோனா அச்சம் கொள்ளும் வகையில் இல்லை என்று கருதுவதாக சுதாகார் கூறியுள்ளார்.

ஒரு வேளை மூன்றாம் அலை வந்தாலும், நாம் எதற்கும் தயாராகவே இருக்கிறோம் என்று கூறிய சுதாகர், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கரோனாவிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.

மக்களிடேயே நாம் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது, ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஜெயதேவா மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சி.என். மஞ்சுநாத் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com