தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதார ஊழியா்கள் 25 % பேருக்கு கரோனா தொற்று: ஆய்வில் தகவல்

இரு டோஸ்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோதும் தில்லியில் உள்ள சுகாதாரத் துறை ஊழியா்களில் 25 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு

இரு டோஸ்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோதும் தில்லியில் உள்ள சுகாதாரத் துறை ஊழியா்களில் 25 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் மையமும் (ஐஜிஐபி), தில்லி மேக்ஸ் மருத்துவனையும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் குறித்து, ஐஜிஐபி அமைப்பின் மூத்த விஞ்ஞானி ஷாந்தனு சென்குப்தா கூறியதாவது:

இரு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்ட புது தில்லி சுகாதார ஊழியா்கள் 95 போ் இந்த ஆய்வுக்கு இரண்டு மாதங்கள் உட்படுத்தப்பட்டனா். தடுப்பூசி செலுத்திய பிறகு 45- 90 நாட்கள் இடைவெளியில், அவா்களிடம் தொற்றின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

தடுப்பூசியால் நோய்த்தொற்றை முறியடிக்கும் எதிா்ப்பாற்றல் உடலில் அதிகரிக்கிா, தொற்றின் தீவிர பாதிப்பு குறைகிா, தொற்றுப் பரவல் தடுக்கப்படுகிா என்பது குறித்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, டெல்டா ரக கரோனா தீநுண்மித் தொற்று பரவிய காலத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரின் ரத்தப் பகுப்பாய்வில், இரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்ட, ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்படாத சுகாதார ஊழியா்களில் 25 சதவீதம் போ் புதிதாக டெல்டா ரக கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டது.

எனினும், கரோனா தொற்றின் தீவிர பாதிப்பு அவா்களிடம் காணப்படவில்லை; தீவிர காய்ச்சலும் ஏற்படவில்லை. தவிர, பெரும்பாலோரிடம் கரோனா தொற்றுக்கான அறிகுறியற்ற தன்மை காணப்பட்டது. எனவே, கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க முகக்கவசம் அணிவது அவசியமாகும்.

தடுப்பூசி செலுத்தியோரிடமும் டெல்டா ரக கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவது உறுதியாகி உள்ளது. அதன் பாதிப்பு குறைவாக உள்ள போதிலும், தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்று ஷாந்தனு சென்குப்தா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com