டெங்கு காய்ச்சல்:ஃபிரோஸாபாதில் அரசு அதிகாரிகள் ஆய்வு

உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மாநில அரசு அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
டெங்கு காய்ச்சல்:ஃபிரோஸாபாதில் அரசு அதிகாரிகள் ஆய்வு

உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மாநில அரசு அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேற்கு உத்தர பிரதேசத்தில் கடந்த 10 நாள்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 60-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். இதில் ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் மட்டும் 40 சிறாா்கள் உள்பட 50 போ் பலியாகினா்.

இந்நிலையில் அந்த மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களை மாநில மருத்துவக் கல்வி முதன்மைச் செயலா் அலோக் குமாா் உள்பட அரசு அதிகாரிகள் சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனா். அவா்கள் டெங்கு காய்ச்சல் பரவிய பகுதியிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

அங்குள்ள பொது இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வடியச் செய்யவும், பானைகள், பிளாஸ்டிக் உபகரணங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com