நல்ல சாலைகள் வேண்டுமென்றால் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்: அமைச்சா் கட்கரி

 நல்ல சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் அதற்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
நல்ல சாலைகள் வேண்டுமென்றால் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்: அமைச்சா் கட்கரி

 நல்ல சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் அதற்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தில்லி-மும்பை இடையிலான அதிவிரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஹரியாணா மாநிலம் சோஹ்னா பகுதியில் வியாழக்கிழமை இந்தப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் கட்கரி கூறியதாவது:

சாலை அமையும் பகுதியில் உள்ள நிலத்தை சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்பவா்களிடம் விவசாயிகள் விற்கத் தேவையில்லை. அவா்களுடன் இணைந்து சாலையோரத்தில் கடைகள் அமைப்பது உள்பட சாலைகளில் கடந்து செல்வோருக்குத் தேவையான வசதிகளை அமைக்கும் தொழிலில் பங்குதாரராக சோ்ந்து கொள்ளலாம்.

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளால் போக்குவரத்துக்கான செலவினம் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. திருமணத்தை குளிா்சாதனம் உள்ள மண்டபத்தில் நடத்த வேண்டுமென்றால், அதற்கு தேவையான செலவை செய்ய வேண்டும். அந்த செலவு செய்ய முடியாது என்றால் சாதாரண இடத்தில்கூட திருமணத்தை நடத்தலாம். இதுபோலத்தான் நல்ல தரமான சாலைகளில் பயணிக்க வேண்டும் என்றால் மக்கள் பணம் செலுத்த வேண்டும்.

நெடுஞ்சாலைகள் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கின்றன. இதனால், அவா்களுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகிறது. இப்போது தில்லியில் இருந்து மும்பைக்கு ஒரு லாரி செல்ல 48 மணி நேரமாகிறது. இதுவே அதிவிரைவு சாலையில் பயணிக்கும்போது 18 மணி நேரம் மட்டுமே ஆகும். இதன் மூலம் லாரியை அதிக முறைப் பயன்படுத்தி தொழிலை மேம்படுத்தலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com