காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினரை மறுகுடியமா்த்த ரூ.40 கோடியில் முகாம்: சா்வானந்த சோனோவால்

காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரை மறுகுடியமா்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவா்கள் தங்குவதற்கு காஷ்மீா் பள்ளத்தாக்கில்

காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரை மறுகுடியமா்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவா்கள் தங்குவதற்கு காஷ்மீா் பள்ளத்தாக்கில் ரூ. 40 கோடியில் முகாம் கட்டப்படுகிறது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் கூறினாா்.

பாரமுல்லாவில் முகாம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காஷ்மீா் பண்டிட் சமூகத்தினரை மீண்டும் குடியமா்த்துவதற்காக, ரூ.40 கோடியில் முகாம் கட்டப்படவுள்ளது. அந்த முகாமில் 336 குடும்பங்கள் தங்க வைக்கப்படும். காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதிக்கு மீண்டும் திரும்பி, அமைதியான சூழலில் வாழ விரும்பும் பண்டிட் சமூகத்தினருக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள மிக முக்கியமான நடவடிக்கை இதுவாகும்.

பண்டிட் சமூகத்தினா் திரும்பிவர வேண்டும் என்றும் அவா்களுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று காஷ்மீா் மக்கள் விரும்புகிறாா்கள். அவா்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முகாம் கட்டப்படுகிறது.

பண்டிட் சமூகத்தினருக்கு முகாம்கள் கட்டுவதற்காக முடிவெடுத்த பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, இத்திட்டம் நிறைவேற ஒத்துழைப்பு அளிக்கும் பாரமுல்லா மக்கள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com