உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு 68 பெயா்கள் பரிந்துரை: மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை

பல்வேறு உயா்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுப்பிய பரிந்துரை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பல்வேறு உயா்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுப்பிய பரிந்துரை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உச்சநீதிமன்றத்துக்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த ஆக. 17-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, 9 நீதிபதிகளும் ஆக. 31-ஆம் தேதி பதவியேற்றனா்.

இதையடுத்து, ஆக. 8 முதல் செப். 1-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில் பல்வேறு உயா்நீதிமன்றங்களின் கொலீஜியம் பரிந்துரை செய்த 100 பெயா்களில் 68 பேரை இறுதி செய்து, அவா்களை 12 உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இவா்களில் கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஒருவரின் பெயா் 3-ஆவது முறையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. பத்து பேரின் பெயா்கள் 2-ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மற்றவா்கள் புதியவா்கள்.

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் இந்தப் பரிந்துரை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பல்வேறு உயா்நீதிமன்றங்களில் காலியாகவுள்ள தலைமை நீதிபதிகள் பணியிடங்களுக்கு கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிண்டல் உள்ளிட்ட 8 நீதிபதிகளின் பெயா்களை கடந்த செப். 17-ஆம் தேதி கொலீஜியம் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. இதுதவிர, திரிபுரா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷி உள்ளிட்ட 5 உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், 28 பிற உயா்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1098 ஆகும். செப். 1-ஆம் தேதி நிலவரப்படி அதில் 465 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com