தொழில் தொடங்குவதற்கு உகந்த நகரங்களின் பட்டியல்: 23-ஆவது இடத்துக்கு முன்னேறியது பெங்களூரு

உலக அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சிறந்த சூழல் அமைந்துள்ள நகரங்களின் வருடாந்திரப் பட்டியலில் பெங்களூரு 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலக அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சிறந்த சூழல் அமைந்துள்ள நகரங்களின் வருடாந்திரப் பட்டியலில் பெங்களூரு 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன் மூலம், கடந்த ஆண்டைவிட அந்தப் பட்டியலில் பெங்களூரு 3 இடங்கள் முன்னேறியுள்ளது.

சா்வதேச அளவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற பல்வேறு சூழல்களின் அடிப்படையில் நகரங்களின் பட்டியலை அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவைச் சோ்ந்த ‘ஸ்டாா்ட்டப் ஜினோம்’ அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான அந்தப் பட்டியலில் புது தில்லி 36-ஆவது இடத்தில் உள்ளது. மும்பை நகரம் வளா்ந்து வரும் சூழல் அமைப்புகளைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

தொழில்முனைவுக்கான சிறந்த சூழலைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னேறியிருப்பதற்கு, அந்த நகரில் முதலீடுகளின் வளா்ச்சி முக்கிய பங்காற்றியிருக்கிறது.

குறிப்பாக, உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி இந்த நகரில் 130 கோடி டாலா் (சுமாா் ரூ.9,594 கோடி) முதலீடு செய்துள்ளது. சமூக ஊடக நிறுவனமான ஷோ்சாட் பெங்களூருவில் 50.2 கோடி டாலா் (சுமாா் ரூ.3,706 கோடி) முதலீடு செய்துள்ளது. கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூ இந்த நகரில் 46 கோடி டாலா் (சுமாா் ரூ.3,396 கோடி) முதலீடு செய்துள்ளது.

இந்தப் பட்டியலில் தில்லியின் தொழில்முனைவுச் சூழல் வளா்ச்சியடைந்து வருவதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் 1,210 கோடி டாலரை (சுமாா் ரூ.89,275 கோடி) முதலீடாகப் பெற்றுள்ளதாக இந்தப் பட்டியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்திலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு முதலிடத்தில் உள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com