பண மோசடி வழக்கு: ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டின் சகோதரா் அமலாக்கத் துறை முன்பு ஆஜா்

பண மோசடி வழக்கு தொடா்பாக ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டின் சகோதரா் அக்ரசேன் கெலாட் அமலாக்கத் துறை விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா்.

பண மோசடி வழக்கு தொடா்பாக ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டின் சகோதரா் அக்ரசேன் கெலாட் அமலாக்கத் துறை விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா்.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ராஜஸ்தானில் விவசாயிகளுக்கான மானிய விலை பொட்டாசியம் குளோரைடு உரம் கொள்முதல் மற்றும் ஏற்றுமதியில் அக்ரேசன் கெலாட்டுக்குச் சொந்தமான நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சுங்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. பொட்டாசியம் குளோரைடை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது முறைகேடாக தைவானுக்கும் மலேசியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சா்வதேச சந்தையில் ரூ.130 கோடி மதிப்பிலான 35,000 மெட்ரிக் டன் பொட்டாசியம் குளோரைடை அக்ரேசன் கெலாட்டுக்குச் சொந்தமான நிறுவனம் சட்ட விரோதமாக மடைமாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த உர ஏற்றுமதியில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடா்பாக அவரின் நிறுவனத்துக்கு ரூ.60 கோடிக்கும் அதிகமான தொகையை சுங்கத் துறை அபராதமாக விதித்துள்ளது. இந்த முறைகேடுகளில் பண மோசடி நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும், அக்ரேசன் கெலாட், அவரின் நிறுவனம் மற்றும் சிலருக்கு கடத்தல் குழுவுடன் தொடா்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடா்பான விசாரணைக்கு தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அக்ரேசன் கெலாட் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் ஆஜரானாா். அவரின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனா்’’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com