ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 6 ஆயிரம்அளிப்பது முதல் திட்டமாக அமல்கேரளத்தில் பிரியங்கா உறுதி

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் திட்டமாக ஏழைகளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா தெரிவி
திருச்சூரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வாக்கு சேகரித்த பிரியங்கா
திருச்சூரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வாக்கு சேகரித்த பிரியங்கா

சாலக்குடி: கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் திட்டமாக ஏழைகளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்தாா்.

திருச்சூா் மாவட்டத்தில் பல்வேறு வீடுகளுக்குச் சென்று குடும்பத் தலைவிகளை பிரியங்கா புதன்கிழமை சந்தித்து வாக்கு சேகரித்தாா். பின்னா் பெண்கள் மத்தியில் அவா் ஆற்றிய உரை:

25 முதல் 47 வயது வரை எனது வீட்டை சுத்தம் செய்தும், உணவு சமைத்தும், குழந்தைகளைப் பராமரித்தும் வந்தேன். குடும்பத் தலைவிகள் இல்லை என்றால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்காது. குடும்பத் தலைவிகளிடம் இருந்து அரசும், அரசியல் கட்சிகளும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகள் சுயமாக செயல்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதைத்தான் ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளின் பணிகளை முதல் முறையாக ஓா் அரசியல் கட்சி அங்கீகரிப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக காணப்படுகிறீா்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் திட்டமாக ஏழைகளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 2 ஆயிரம் அளிக்கப்படும் என்றாா்.

முன்னதாக, கேரள பேரவைத் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களில் 50 சதவீதம் போ் 20 முதல் 40 வயதுக்குள்பட்டவா்களாக உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக சுட்டுரையில் பிரியங்கா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com