எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு மம்தா கடிதம்

நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மத்தியில் ஆளும் பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ்

புது தில்லி: நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மத்தியில் ஆளும் பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை தொடங்கும் நிலையில், மம்தாவின் கடிதத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி புதன்கிழமை வெளியிட்டது. காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், திமுக தலைவா் ஸ்டாலின், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ், சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோருக்கு இந்தக் கடிதத்தை மம்தா அனுப்பியுள்ளாா்.

அதில், ‘நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடா் தாக்குதல் நடத்தி வருவது குறித்த எனது வருத்தங்களைத் தெரிவிக்கவே இந்தக் கடிதம் எழுதியுள்ளேன். தில்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ளது. இது மிகவும் மோசமான செயல்பாடாகும்.

சுதந்திரத்துக்கு பிறகு இதுவரை மத்திய, மாநில அரசுகளின் உறவு இந்த அளவுக்கு மோசமடைந்தது கிடையாது. பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து பாஜக பழிவாங்கி வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை முறியடிக்க ஒத்த கருத்துடைய பிற கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு, நாட்டு மக்களுக்கு நாம் மாற்று அரசியலை வழங்க வேண்டும். பேரவைத் தோ்தல்கள் முடிந்த பிறகு இதுதொடா்பாக விரிவாக செயல்திட்டம் வகுப்பது குறித்து நாம் விவாதிக்க வேண்டும்’ என்று மம்தா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com