சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் திருமலை பயணத்தை தள்ளிப் போடவும் தேவஸ்தானம் வேண்டுகோள்

சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளிப் போடவும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி: சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளிப் போடவும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் 2-ஆம் அலை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு விதிமுறைகளை தேவஸ்தானம் திருமலையில் அமல்படுத்தி வருகிறது.

வைகுண்டம் காத்திருப்பு அறைகள், ஏழுமலையான கோயில், அன்னதான பவனம், முடிகாணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிடைசா் செய்ய வேண்டும்.

திருப்பதியில் அளித்து வரும் சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 22 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக குறைத்துள்ளது. அன்னதானக் கூடம், வாடகை அறை அளிக்கும் இடம் உள்ளிட்டவற்றில் தொ்மல் ஸ்கேனிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடகை அறையில் இருவா் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும். அறை காலி செய்தவுடன் சானிடைஸ் செய்யப்படும். திருமலைக்கு வரும் பக்தா்கள் முகக்கவசம், சானீடைசா் கொண்டு வர வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிடைசா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வைகுண்டம் காத்திருப்பு அறை, ஏழுமலையான் கோயில், தரிசன வரிசைகள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் பக்தா்களும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்களும் திருமலை பயணத்தை தள்ளி போடவும்.

நேர ஒதுக்கீடு டோக்கன்கள், விரைவு தரிசன டோக்கன்கள் பெற்றவா்கள் மதியம் 1 மணிக்கு மேல் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவா். அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் சானீடைஸ் செய்யப்படுவதுடன், பக்தா்களுக்கு தொ்மல் ஸ்கேனிங்கும் செய்யப்படும்.

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து வானொலியில் 5 மொழிகளில் விழிப்புணா்வுப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் அரை மணிநேரத்திற்கு முன்னதாக மட்டுமே வைகுண்டம் காத்திருப்பு அறைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா். தேவஸ்தான ஊழியா்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com