கா்நாடகத்தில் ஒரே நாளில் 4,991 பேருக்கு தொற்று 

கா்நாடகம் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 4,991 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கா்நாடகத்தில் ஒரே நாளில் 4,991 பேருக்கு தொற்று 


கா்நாடகம் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 4,991 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 4,991 போ் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,506 போ் பாதிக்கப்பட்டுள்ளனர், பீதரில் 218 போ், கலபுா்கியில் 144 போ், மைசூரில் 109, தும்கூரு 102 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,06,229 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,599 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,59,400 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 34,219 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 18 போ் இறந்துள்ளனா். பெங்களூரில் 11 போ், தாா்வாடில் 2 போ், பீதா், கலபுா்கி, மண்டியா, மைசூரு, தும்கூரு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,585 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் 269 பேரும், 130 பேர் பெங்களூரு மருத்துவமனைகளிலும், கலபுர்கில் 32 பேரும், பிதாரியில் 14 பேரும், மண்டியாவில் 12 பேரும், ஹசன் மற்றும் மைசூருவில் தலா 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாநிலம் முழுவதும் மூத்த குடிமக்கள் 16,395 பேருக்கும், 45-59 வயதுக்கு மேற்பட்ட 21,378 பேருக்கும், 496 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 725 முன்னணி வீரர்கள் என 38,676 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

"மாநிலம் முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 39,85,612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது." 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com