மொத்த வாக்காளர்கள் 90, பதிவான வாக்குகள் 171: அசாம் தேர்தலில் குழப்பம்

அசாமில் திமா ஹசாவ் மாவட்டத்தில் ஹாப்லாங் தொகுதியிலிருக்கும் ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 90 ஆக இருக்க, அங்கு மொத்தம் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


அசாமில் திமா ஹசாவ் மாவட்டத்தில் ஹாப்லாங் தொகுதியிலிருக்கும் ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 90 ஆக இருக்க, அங்கு மொத்தம் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாமில் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட வாக்குப்பதிவில் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வாக்குச் சாவடியில் பணியிலிருந்த 5 தேர்தல் அலுவலர்களை மாவட்ட தேர்தல் அதிகாரி பணியிடைநீக்கம் செய்தார். மேலும் அங்கு மறுவாக்குப்பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் அலுவலர்களைப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு வாக்குப்பதிவுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 2-ம் தேதியே வழங்கப்பட்டபோதிலும், திங்கள்கிழமை காலைதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுபற்றி தேர்தல் அலுவலர் ஒருவர் தெரிவித்தது:

"அந்த கிராமத் தலைவர் வாக்காளர்கள் பட்டியலை ஏற்க மறுத்து, சொந்தமாக வாக்காளர்கள் பட்டியலை கொண்டுவந்துள்ளார். அந்தப் பட்டியலின்படியே கிராம மக்கள் வாக்களித்துள்ளனர். கிராமத் தலைவர் கோரிக்கையை தேர்தல் அலுவலர்கள் எந்தக் காரணத்துக்காக ஏற்றுக்கொண்டனர் என்ற தகவல் உடனடியாகக் கிடைக்கப்பெறவில்லை."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com