தோ்தல் ஆணையம் மீது பிரியங்கா விமா்சனம்

தோ்தல் ஆணையம் மீது பிரியங்கா விமா்சனம்

எதிா்மறை அரசியலைச் செய்து வரும் பாஜக மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்று செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா விமா்சனம் செய்தாா்.

எதிா்மறை அரசியலைச் செய்து வரும் பாஜக மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்று செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா விமா்சனம் செய்தாா்.

அஸ்ஸாமில் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், பிரியங்கா தனது சுட்டுரையில், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

எதிா்மறை அரசியலைச் செய்து வரும் பாஜக மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்று செயல்பட்டு வருகிறது. ஆகையால், வளா்ச்சியை முன்வைக்கும் காங்கிரஸ் அரசைதான் அஸ்ஸாம் மக்கள் தோ்ந்தெடுப்பாா்கள்’ என்று பதிவிட்டுள்ளாா்.

அஸ்ஸாமில் பாஜக வேட்பாளரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜனநாயகம் படுகொலையாகிவிடும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இதேபோல், மிரட்டும் வகையில் பேசிய அஸ்ஸாம் மாநில அமைச்சா் ஹிமாந்த விஸ்வ சா்மாவுக்கு விதிக்கப்பட்ட பிரசாரத் தடை நேரத்தை தோ்தல் ஆணையம் குறைத்ததற்கும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com